fbpx

தமிழக பொதுப்பணித்துறையில் வேலை!… 500 பணியிடங்கள்!… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 500 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் Graduate Apprentices:காலியிடங்களின் எண்ணிக்கை – 355, Civil Engineering – 315, Electrical and Electronics Engineering – 25, Architecture – 15. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும். ஊக்கத்தொகை: 9,000 வழங்கப்படும்.
Technician (Diploma) Apprentice காலியிடங்களின் எண்ணிக்கை – 145, Civil Engineering – 115, Electrical and Electronics Engineering – 25, Architecture – 5. கல்வி தகுதி: Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும். ஊக்கத்தொகை: 8,000

வயது தகுதி: 31.10.2022 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் PUBLIC WORKS DEPARTMENT TAMILNADU என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023 ஆகும்.

Kokila

Next Post

பிளஸ் 2 பொதுத்தேர்வு!... விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!... பள்ளிக்கல்வித்துறை!

Wed Mar 29 , 2023
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, […]

You May Like