fbpx

10 வது தேர்ச்சி போதும்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை.. மாதம் ரூ.78,000 சம்பளம்..!! – அசத்தல் அறிவிப்பு

வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் அரசு வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பையும், வேலை வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வேலை வாய்ப்புக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும். அதிகபட்ச சம்பளம் 78,000 ரூபாய் வரை கிடைக்கும்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Ftter, Milwright Fitter, Grnder/Gas Cutter மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம் என  தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder (CS- GTAW +SMAW, SS-GTAW +SMAW. CS & SS-GTAW +SMAW, Alloy (P92 & p91)-GTAW+ SMAW. Duplex & Super Duplex – GTAW +SMAW) Piping Fabricator, Poling Fitter. Structure Fabricator. Structure Fitter, Miwright Fitter, Grinder (AG4 &AG7) /Gas cutter மற்றும் Piping Foreman தேவைப்படுகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ. 78,000/- வரை சம்பளம் கிடைக்கும்.

சம்பள விவரம் : Pping Fabricator ரூ 40,000/- முதல் ரூ. 51,000/- வரை, Pping Fiter ரூ 36,000/- முதல் ரூ. 42.000/- வரை சம்பளம் கிடைக்கும். Structure Fabricator ரூ. 42000/- முதல் ரூ. 51,000/- வரை, Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42000/- வரை, Millwright Ftter 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ.32,000/- வரை சம்பளம் கிடைக்கும். மற்றும் Poing Fireman ரூ. 53,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov. என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் gvercnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

Read more : தினசரி சுயஇன்பம் ஆரோக்கியத்திற்கு நல்லதா..? – நிபுணர்கள் சொல்வது என்ன..?

English Summary

Jobs in UAE.. 10th pass is enough for this job opportunity. The maximum salary is Rs 78,000.

Next Post

அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட பள்ளி மாணவி..!! மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!!

Thu Jan 30 , 2025
The sudden death of a schoolgirl who ate too much rice has caused shock.

You May Like