fbpx

’ஜான்சன் & ஜன்சன் பவுடரால் புற்றுநோய்’..!! பாதிக்கப்பட்டவருக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடு தர அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு..!!

பல வருடங்களாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வென்றுள்ளார்.

ஜான்சன் & ஜான்சன் பவுடர் காரணமாக ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமா காரணமாக பாதிக்கப்பட்டதாக நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு நடுவர் மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.126 கோடியை அந்த நிறுவனம்.. அவருக்கு செலுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரான இவான் ப்ளாட்கின், 2021 ஆம் ஆண்டில் தனக்கு இந்த கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்துள்ளர். தனக்கு இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மருத்துவ சோதனைகளை செய்துள்ளார். ஜே&ஜேவின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு இந்த கேன்சர் வந்ததை சோதனைகள் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து அந்த நிறுவனம் காரணமாகவே தான் கேன்சர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி, வழக்குத் தொடர்ந்தார். ஃபேர்ஃபீல்ட் கவுண்டி, கனெக்டிகட் சுப்பீரியர் கோர்ட்டில் உள்ள நடுவர் மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜான்சன் & ஜான்சன் பவுடர் காரணமாக புற்றுநோயான மீசோதெலியோமா காரணமாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய கனெக்டிகட் நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதோடு ஜான்சன் & ஜான்சன் பவுடர் நிறுவனம் இது போக அந்த நபருக்கு கூடுதல் சேதங்களைச் செலுத்த வேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. கூடுதல் சேதங்களை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது இந்த வழக்கை மேற்பார்வையிடும் நீதிபதியால் பின்னர் தீர்மானிக்கப்படும்.

Read More : கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

English Summary

A man who developed cancer after years of using Johnson & Johnson talcum powder has won a lawsuit against the company.

Chella

Next Post

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்..!! ICMR எச்சரிக்கை..!!

Thu Oct 17 , 2024
Shocking information has come out that the incidence of cancer in India is on the rise.

You May Like