மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வேளாண்மை பாடத்தை கூடுதலாக மேல்நிலை பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவாக அறிமுகப்படுத்தி 300 வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இவற்றில் மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) மூலம் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை மாலைக்குள் தனிநபர் மூலம் ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார் அனுப்பியுள்ள தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.