fbpx

பிக்பாஸ் வீட்டில் திடீரென கதறி அழுத ஜோவிகா..!! அதிர்ச்சியில் அம்மா வனிதா விஜயகுமார்..!!

பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் விதமாக ‘Know Your Housemates’ என்ற டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில், 2 போட்டியாளர்கள் தாங்கள் எந்த அளவுக்கு பிரபலம் என்பதையும் இதில் விவாதிக்க வேண்டும். இந்த டாஸ்க் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் மற்றும் ஜோவிகாவுக்கு இடையில் நடந்து வருகிறது.

இந்த டிபேட்டில் ஜோவிகா பேசியபோது, ”நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே என் பள்ளி அனுபவங்களை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். நான் சில டிபேட்களில் கலந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன்.

ஆனால், என்னை யாரும் கலந்துகொள்ள விடவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததால், அந்த திறமையே எனக்கு இருக்கிறது என்று இப்போதுதான் எனக்கே தெரிகிறது” என்று அழுது கொண்டே கூறினார். ஜோவிகாவின் இந்தப் பேச்சு அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்த அவரை கைத்தட்டி உச்சாகப்படுத்தி தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

ஆதி குணசேகரனாக களமிறங்கியுள்ள வேல ராமமூர்த்தி..!! மாரிமுத்துவை விட அதிக சம்பளமா..?

Thu Oct 5 , 2023
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சமீபத்தில் காலமானார். இவருடைய மறைவுக்குப்பின் வேறு யார் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது. இந்த லிஸ்டில் பல நடிகர்களின் பெயர் வந்தாலும், முதலில் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை முதலில் வேல ராமமூர்த்தி மறுத்துவிட்டார். படக்குழு பேச்சுவார்த்தை […]

You May Like