fbpx

மகிழ்ச்சி… விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு “சிவ சக்தி” என பெயரிட்டார் பிரதமர் மோடி…

சந்திராயன் 3 விண்களத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. காலை 7 மணிக்கு பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் இருந்ததால் சந்திராயன் விண்களம் தரையிறங்கியது நேரில் கண்டுகளிக்க முடியவில்லை, இருந்தாலும் காணொளி வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்ததாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் பேசியபோது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், அதாவது சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை “சிவ சக்தி” என இனிமேல் அழைக்க முடிவு செய்துள்ளதாக மோடி கூறினார். மேலும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் எனவும் அறிவிப்பு.

விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகள் எந்த பகுதியில் தரை இறங்குகிறார்களோ அந்த பகுதிக்கு, தரையிறங்கிய நாட்டில் இருந்து ஒரு பெயர் வைப்பார்கள். அதன் படி சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலவினுடைய தென் பகுதியில் அமைந்திருக்கும் அந்த இடத்திற்கு சிவ சக்தி என பெயரிட்டுள்ளார் பிரதமர் மோடி. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது.

மேலும் பேசிய பிரதமர், சந்திராயன் 3விக்ரம் லேண்டரில் இருந்து ரோவேரின் சக்கரம் நிலவின் மேற்பரப்பில் உருண்டோடி சென்றபோது, ரோவேரின் சக்கரத்தில் பதியப்பட்டிருந்த அசோக சக்கரம் நிலவின் மேற்பரப்பில் பதியப்பட்டிருந்ததாகவும், இது நம்முடைய நாட்டின் கவுரவத்தையும், பெருமையையும் உலகத்திற்கே நிரூபித்துள்ளதாக கூறினார்.

Kathir

Next Post

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Sat Aug 26 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Financial Analyst பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 7 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்ளுக்கு […]

You May Like