fbpx

வரும் 16-ம் தேதி இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு…! 7 நகரத்தில் நடைபெறும்…!

இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு 16 ம் தேதி நடைபெற உள்ளது.

பணியாளர் தேர்வு ஆணையம், கணினி அடிப்படையில் “இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2023”-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் 318 தேர்வர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல், விசாகப்பட்டினம், விஜயவாடா, தெலங்கானாவில் ஐதராபாத், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி என 7 நகரங்களைச் சேர்ந்த 7 மையங்களில் தேர்வு நடைபெறும்..

தென் மண்டலத்தில் இத்தேர்வு 16.10.2023, அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஒரே ஷிப்டாக நடைபெறும்.தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்தும், பிறகு அவரவர் தேர்வு நாள் வரை மட்டும் பணியாளர் தேர்வாணைய வலைத்தளத்தில் இருந்து மின்னணு – தேர்வு அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும்.

இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆண்களுக்கு 2 திருமணங்கள் கட்டாயம்..!! இல்லையென்றால் சிறை தண்டனை..? அதிரடி உத்தரவை பிறப்பித்த நாடு..!!

Sat Oct 14 , 2023
எரித்ரியா நாட்டின் ஆண்கள் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. திடீரென்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் எரித்திரியா நாட்டைப் பற்றிய விவகாரம் தான் அது. இதுதொடர்பான பதிவில், எரித்ரியா நாட்டின் ஆண்கள் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், சிறை தண்டனை விதிக்கப்படும் […]

You May Like