fbpx

ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு இல்லை என்று அர்த்தமல்ல- அண்ணாமலை

ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்று கோவலத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அண்ணாமலை, இலக்கு 2024: தெற்கில் வெல்லப்போவது யார்? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் பேசினார். அப்போது “ராகுல் காந்திக்கு வேலையில்லை என்பதால் நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோருமே வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகக் கூறுவது தவறு.

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பாஜக தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது. புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் கூட்டணியில் உள்ளோம். வரும் 2024 தேர்தலில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு நல்ல திருப்புமுனை ஏற்படும். அந்த வெற்றிக்கு மோடி முக்கியப் பங்கு வகிப்பார். 2014க்கு முன்பு தென்னிந்தியாவின் அரசியல் வேறாக இருந்தது. வாஜ்பாய் காலத்தில் தமிழகத்தில் பாஜக ஓர் ஏற்றம் கண்டது. அதன் பிறகு 2014க்கு பின்பு பாஜக தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களும், கலாச்சார மீட்டெடுப்பு முயற்சிகளும் சேர்ந்து தெற்கில் பலன் தரப் போகிறது” என்று அண்ணாமலை பேசினார்.

Baskar

Next Post

சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது- 6 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Fri Jun 2 , 2023
ஒடிசா மாநிலம் பாலசோர் எனும் இடத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்  ஆகியவற்றுக்கு இடையே தினசரி அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு […]

You May Like