தூங்கும்போது வரும் குறட்டை பிரச்சனையை சரி செய்யும் சில வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
நாம் தூங்கும் பொழுது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி மூச்சு விடும்பொழுது குறட்டை ஏற்படுகின்றது. இந்த குறட்டை பிரச்சனையால் நம் தூக்கம் கெடுவது மட்டுமில்லாமல் நம் அருகில் இருப்பவர்களின் தூக்கமும் கெடுகின்றது. எனவே இந்த குறைட்டை பிரச்சனையை சரி செய்ய சில வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை பிரச்சனை ஏற்படும். அதனால் உடல் எடையை குறைக்க வேண்டும்.சிலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும். இது நம் தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டையை வரவைக்கும். அதனால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
சிலர் நேராக படுத்து உறங்குவார்கள். அவ்வாறு நேராக படுத்து உரங்கும் பெழுது குறட்டை ஏற்படும். அதனால் பக்கவாட்டில் படுக்க வேண்டும்.மொலோட்டினின் அதிகமாக இருக்கும் வாழைப்பழம், அண்ணாச்சி பழம், கமலா பழம் ஆகியவற்றை சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் வரும்.தலையனையை உயர்த்தி வைத்து தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீரான சுவாசம் பெறலாம்.புகைப்படிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.தினமும் தூங்கும் முன்பு ஒரு டம்ளர் பாலில் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் குறட்டை பிரச்சனையை சரிசெய்யும்.
இஞ்சி தேநீர் குடித்தால் குறட்டைத் தொல்லை தீரும். இது தொண்டைக்கு இதம் அளிக்கும். இஞ்சியானது நாசிக்குளியை திறந்து வீக்கத்தை குறைக்கும்.ஏலக்காய் சுவாசப் பாதைகளில் இருக்கும் அடைப்புகளை நீக்கும். குறட்டை பிரச்சனையை தீர்க்கும்.இரண்டு பூண்டுகளை சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளய் தண்ணீர் குடித்து வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பூண்டு சுவாசப் பாதையில் சளியின் தேக்கத்தை எதிர்த்து போராடும். சுவாச மண்டலத்தை பாதுகாக்கும்.தினமும் தூங்குவதற்கு முன்னர் யூகலிப்டஸ் எண்ணெயை முகர்ந்து வந்தால் இது சுவாசப் பாதையில் இருக்கும் நெஞ்சு சளியை எதிர்த்து போராடும். மேலும் இது சுவாசப் பாதையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து குறட்டை பிரச்சனையை சரி செய்கின்றது.
செரிமான பிரச்சனை இருந்தாலும் குறட்டை வரக்கூடும். எனவே செரிமானப் பிரச்சனையை சரி செய்யக் கூடிய வெந்தயத்தை அதிகம் நம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை ஒன்றரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இரவு தூங்கும் முன்பு வெந்தயத்தை நீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.குறட்டை பிரச்சனையை சரி செய்ய தேனும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனில் உள்ள மருத்துவ குணம் சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்புகளில் ஏற்படும் அதிர்வுகளை குறைக்கின்றது.