தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் நிலவி வந்தது. இந்த மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்த பின் அதிமுக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது ஒவைசியின் AIMIM கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளனர்.
அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இக்கட்சி இஸ்லாமிய வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியை கேட்டுப்பெற முடியு செய்துள்ளதாக தெரிகிறது.