fbpx

”போதும் என்னை விட்டுடுங்க”..!! 9 வயது சிறுமியை ஓராண்டாக மிரட்டி பலாத்காரம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நீலந்தாங்கலை சேர்ந்தவர் உத்திரகுமார் (35). இவர், பம்மை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் உத்திரகுமார், 4ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதேபோல், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த சிறுமியை நாசம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் உத்திரகுமாரின் தொல்லை தாங்க முடியாததால் பொறுமையை இழந்த சிறுமி, தனது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உத்திரகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 9 வயது சிறுமியை மிரட்டி கடந்த ஓராண்டு மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கணவர், மாமியாரை படுகொலை செய்து பிரிட்ஜில் வைத்திருந்த பெண்..!! எதற்காக தெரியுமா..? திடுக்கிடும் சம்பவம்..!!

Mon Feb 20 , 2023
அசாம் மாநிலம் கவுகாத்தி நகர் நரேந்தி பகுதியில் வசித்து வந்தவர் அமர்ஜோதி டே. இவர் தனது தாயார் சங்கரியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தனா கலிடா என்ற பெண்ணை அமர்ஜோதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவர் அமரஜோதியையும், மாமியார் சங்கரியையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார் வந்தனா. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இதன் […]

You May Like