தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய தவெகவின் தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதலமைச்சர் முக.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பேசுகையில், “பிறப்பால் ஒரு முதல்வர் உருவாகக் கூடாது. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என பேசியதால் பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தது. அப்போது, விஜய் என்னை அழைத்தார். தளபதி என அழைக்கக் கூடிய விஜய் தலைவர் என்ற பரிணாமத்தை நோக்கி செல்கிறார். தமிழகத்தின் எதிர்காலம். தமிழகத்தின் முகம் விஜய். சாதி அரசியல் பேசி தேர்தல் அரசியலில் வென்ற கபடதாரிகள். பெரியாரிசம் பேசுவர்; சமூக சீர்திருத்தம் பேசுவர்; ஆனால், சாதி ரீதியாக தேர்தலை அணுகுவர்.
பெரியார், அம்பேத்கர், அண்ணா கண்ட கனவுகள் நிறைவேற்றப்பட்டவில்லை. இங்கு கடனை உருவாக்கி ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள். பெரியாரையும், அம்பேத்கரையும் ஒரே இடத்தில் வைத்து சமூகநீதி பேசும் இயக்கம் இது. 15 ஆண்டுகளில் அதிமுக வாங்கிய கடனை 4 ஆண்டுகளில் திமுக வாங்கியிருக்கிறது. எங்களிடையே பிரச்சனை என பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அடுத்த 62 வாரம் நாம் தான் எதிர்க்கட்சி. விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர்” என்று பேசியிருந்தார்.
மேலும், என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறீர்கள். ஆனால், என் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்..? அதுவும் அவர் போடும் பேண்ட் சட்டையை மாற்றினால் கூட பரவாயில்லை. அதே கலரில் பேண்ட் சட்டை போடுறீங்க. இதிலிருந்தே தெரிகிறது. முதல்வரும் விஜய்க்கு ரசிகர் தான் என்று. ஒருவரை ஒருமையில் பேசுவதை நிறுத்துங்கள். மக்கள் வரவேற்பார்கள்.
தன்னுடைய பொருளாதாரத்தை தூக்கி எறிந்த தலைவர்களை மக்கள் தூக்கி பிடிப்பார்கள். ஆட்சியமைத்து பொருளாதாரத்தை சேர்க்கும் அரசாங்கத்தை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு பொருளாதாரத்தை தூக்கி எறிந்து நிற்கின்ற தலைவரை பார்க்கிறோம். இதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். பொதுச்செயலாளருக்கும், எனக்கும் பிரச்சனை என்று யூடியூபில் சிலர் பேசி வருகின்றனர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எங்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : வடசென்னை மக்களே..!! முக்கிய வழித்தடங்களில் இன்று மின்சார ரயில்கள் ரத்து..!! இந்த டைம் நோட் பண்ணிக்கோங்க..!!