fbpx

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்..!! முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்..? கலக்கத்தில் அண்ணாமலை..!!

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், திமுக-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் 6 மாத காலத்திற்கு கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக காய்த்ரி ரகுராம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்திருந்தார்.

பாஜகவில் இருந்து விலகிய காய்த்ரி ரகுராம்..!! முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்..? கலக்கத்தில் அண்ணாமலை..!!

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக பணியாற்ற விடுவதாக உறுதியளித்தால் அதிமுக, திமுக, விசிக, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சி அழைத்தாலும் நான் இணைய ரெடி என்று நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு திமுகவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

மூளையில் சில பகுதிகளை காணவில்லை..!! கூர்மையாக மாறிய எலும்புகள்.!! பாலியல் பலாத்காரமா..? உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

Wed Jan 4 , 2023
ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 20 வயது மதிக்கத்தக்க அஞ்சலி என்ற நபர் காரில் சிக்கி பல கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களோடு உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்ய டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு (எம்ஏஎம்சி) அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சலியின் தாயார் தனது மகளின் ஆடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் […]
மூளையில் சில பகுதிகளை காணவில்லை..!! கூர்மையாக மாறிய எலும்புகள்.!! பாலியல் பலாத்காரமா..? உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

You May Like