fbpx

கலைஞர் கைவினைத் திட்டம்… ரூ.50,000 மானியம் வழங்கும் தமிழக அரசு…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதுடன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற பெயரில் தமிழகத்துக்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்யவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதுடன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மர வேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

English Summary

Kalaingar Handicraft Scheme… Tamil Nadu Government to provide Rs. 50,000 subsidy…! Who can apply?

Vignesh

Next Post

கலிபோர்னியாவில் உள்ள இந்து கோயில் சேதம்.. இந்தியாவுக்கு எதிராக தொடரும் வன்முறை..!! பெரும் பதற்றம்

Sun Mar 9 , 2025
Hindu temple vandalised in California with anti-India graffiti, BAPS says 'will never let hate take root'

You May Like