கல்கி 2898 AD படம் முதல் நாளிலேயே ரூ 200 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படமான ‘கல்கி 2898 ஏடி’ நேற்று (ஜூன் 27) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.
‘கல்கி 2898 ஏடி’ படத்தைப் பொறுத்தவரையில் இந்தியத் திரையுலகத்தின் பெரும் நட்சத்திரங்களான அமிதாப், கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் பலமாக உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முதல் முறையாக நடிக்கும் தெலுங்குப் படம். இப்படி பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி உள்ளது என சொல்லப்படுகிறது. உலக அளவில் சுமார் 750 கோடி வசூலித்தால் மட்டுமே இந்தப் படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில், கல்கி 2898 AD திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் 200 கோடி வசூல் கன்ஃபார்ம் என்றே பாக்ஸ் ஆபிஸ் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், இந்த வாரம் ஞாயிறு வரையிலான முதல் நான்கு நாட்களில், கல்கி வசூல் ஆயிரம் கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்கி 2898 AD படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்தால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பெரிய அடி விழும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் ரசிகர்களோ கல்கி கன்ஃபார்மாக 2000 கோடி வசூலிக்கும் என நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். அதேநேரம் கல்கி தயாரிப்பு நிறுவனம் சார்பாக படத்தின் உணமையான வசூல் பற்றி எப்போது அப்டேட் வரும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
‘பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்’ ஆகிய தெலுங்குப் படங்கள் உலக அளவில் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தின. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு பிரபாஸூக்கு பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் படங்கள் அமையவில்லை. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் ‘பாகுபலி 2’ படத்தை விடவும் குறைவான வசூலையே பெற்றன. தெலுங்கு திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ‘பாகுபலி 2’ படம் 1800 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படம் 1380 கோடியை வசூலித்துள்ளது. அதற்கடுத்து ‘சலார்’ படம் சுமார் 700 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
Read more ; மொத்தம் 8,283 காலியிடங்கள்… வெளியான SBI தேர்வு முடிவுகள்…! எப்படி பார்ப்பது…?