fbpx

ரிலீஸ் தேதியுடன் வெளியான கல்கி 2898 AD போஸ்டர்.. மிரட்டும் பிரபாஸ்!

பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘கல்கி 2898ஏடி’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு வெற்றி கொடுத்த படங்கள் என்றால் எதுவும் இல்லை. அடுத்தடுத்த சருக்களை சந்தித்து வந்த பிரபாஸ் இப்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் சங்கமித்து இருக்கின்றனர்.

தெலுங்கில் இன்னொரு பிரம்மாண்டமான மூவியாக உருவாகியுள்ளது கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக கமல்ஹாசனும் நடித்துள்ளது கல்கி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. சமீபத்தில் அமிதாப் பச்சன் கேரக்டருக்கான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இதுபற்றிய அப்டேட்டை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது கல்கி படக்குழு. அதில், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர். கமலின் இந்தியன் 2 திரைப்படமும் ஜூன் மாதம் வெளியாகிறது.

விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. புராண கால கதையை சயின்ஸ் பிக்‌ஷனுடன் இணைந்து இயக்கியுள்ள நாக் அஸ்வின், பிரபாஸுக்கு தரமான ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Next Post

17 வருடங்களாக மூச்சுக்குழாயில் இருந்த திருகாணி.!! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்.!!

Sat Apr 27 , 2024
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் மூச்சுக்குழாயிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மூக்குத்தியின் திருகாணி வெற்றிகரமாக ஆகற்றப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் வர்ஷா. 35 வயதான இவ்வாறு கடந்த சில தினங்களாக இருமலால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதற்காக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென இருமும் போது சளியுடன் சேர்ந்து ரத்தமும் வந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வர்ஷா உடனடியாக மருத்துவரை சந்தித்து இருக்கிறார். […]

You May Like