fbpx

கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..

கள்ளக்குறிச்சி பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் வகையில் முழுமையாக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி கட்டிடம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டும், வாகனங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வகுப்பறையில் உள்ள பொருட்கள் முழுவதும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்..!

இச்சம்பவத்திற்கு பிறகு 4-ம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.. இதனிடையே பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பள்ளியை சீரமைக்கவும் பள்ளியை தொடர்ந்து நடத்தவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளியை சீரமைக்க உரிய அதிகாரிகளை நியமித்தது.. பள்ளி சீரமைப்புக்கு பிறகு 4ம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது..

இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு நீதிபதி ஜி.வி கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது பள்ளியில் அமைதியான சூழல் நிலவுவதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் முறையாக பின்பற்றப்படுகிறது..” என்று தெரிவித்தார்.. மேலும் எல்.கே.ஜி முதல் 4-ம் வகுப்பு வரை பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்ச் முதல் வாரத்தில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்தார்..

குழந்தைகளின் பயத்தை போக்கும் வகையில், பெற்றோர் பள்ளிக்கு வர அனுமதி வேண்டும் என்று கூறிய நீதிபதி பள்ளியின் 3-வது தளத்திற்கு சீல் வைக்கப்பட்டது நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.. மேலும் வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளை நீக்கி உத்தரவிட்டார்.. பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்..

நடப்பு கல்வியாண்டு வரை பள்ளிக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.. அடுத்த ஆண்டும் போலீஸ் பாதுகாப்பு தேவை எனில் பள்ளி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்..

Maha

Next Post

வாணியம்பாடி அருகே சோகம்! மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி மூன்று மாணவர்கள் பலி! காவல்துறை விசாரணை!

Tue Feb 28 , 2023
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சைக்கிளில் சென்ற மூன்று மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையம்பட்டு கிராமத்தைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் மூலமாக அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வளையம்பட்டு மேம்பாலம் அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மாணவர்களின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த […]

You May Like