கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை.. முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை…

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்தனர்.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் சரமாரி கேள்விகளை எழுப்பினார்..

மேலும், பள்ளி மாணவி உடலை 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.. மறு உடல் கூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், மாணவியின் தந்தை, வழக்கறிஞர் கேசவனும் மறு பிரேத பரிசோதனையின் போது இருக்கலாம் என்றும் நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 29-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்..

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.. கல்வி நிலையங்கள் ஒவ்வொரு பிள்ளையையும் தங்களது சொந்த பிள்ளைகளாக நினைத்து பயிற்றுவிக்க வேண்டாம்.. கல்வி நிலையங்களில் மாறாக எந்த செயல் நடந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன்.. இந்த சோகமான சூழலை பயன்படுத்தி சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.. அமைதியான தமிழகம் தான் அனைவருக்குமான தமிழகம் என்பதை உணர வேண்டும்.. வன்முறை என்பது வளர்ச்சிக்கு எதிரானது என்பதை அவர்கள் உணர வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகளின் அமலியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு...!

Mon Jul 18 , 2022
புதுடெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரைப் போல இப்பொழுதும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் விலைவாசி உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் […]

You May Like