கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.. இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் பள்ளி நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த போது, எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர் என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.. இதுகுறித்து 2 நாட்களுக்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது பள்ளி வளாகத்தில் மரணம் நிகழ்ந்திருப்பதால் அதற்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் தான் பொறுப்பு என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. வழக்குப்பதிவு மற்றும் கைது செய்யப்பட்டதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.. மேலும் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது..
இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.. பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்தனா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது..