இயக்குநர் நெல்சன் அமைதியாக, சமத்துப் பையன் மாதிரி தெரிகிறது. ஆனால் அவர் பெரிய குசும்புக்காரர் என்பது ரஜினிகாந்த் சொல்லித் தான் தெரிய வந்திருக்கிறது. ஜெயிலர் படப்பிடிப்பில் அதுவும் முதல் நாளே ரஜினியை பார்த்து, சார் நீங்க எந்த ஹீரோயினை லவ் பண்ணீங்க, உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க என கேட்டிருக்கிறார் நெல்சன். அதை கேட்ட ரஜினியோ, கமலுடன் இதே கேள்வியை கேட்டீங்களா என பதிலுக்கு கேட்டிருக்கிறார்.
கமல் சாரிடமும் கேட்டேன். கமல் சார் அனைத்தையும் சொன்னார் என ரஜினியிடம் கூறியிருக்கிறார் நெல்சன். கமல் பற்றி நெல்சன் சொன்னது குறித்து நண்பரிடம் போன் பண்ணியா கேட்க முடியும் என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
நெல்சனிடம் கேட்டால் சொல்ல மாட்டாரே. கமல் சார்ட கேட்டுவிடலாம். நெல்சனிடம் எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா என ரசிகர்கள் கமலிடம் சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள்.
கமல் ஹாசனின் லவ் ஸ்டோரியை பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அப்படியொரு ஆர்வம். கமலோ தற்போது இந்தியன் 2 பட வேலையில் பிசியாக இருக்கிறார். கமல் விளக்கம் சொல்வது இருக்கட்டும் நெல்சன் கேட்ட கேள்விக்கு ரஜினி சார் பதில் சொன்னாரா? அந்த ஹீரோயின் யாராக இருக்கும் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடந்ததில் இருந்து குரைக்கும் நாய், சீண்டும் காக்கா பற்றி ரஜினி கூறியது தான் பேசு பொருளாக இருந்தது. இந்நிலையில் இந்த லவ் ஸ்டோரி மேட்டர் வெளியானதும் நாயாவது, காக்காவாவது எங்களுக்கு ரஜினி, கமலின் லவ் பத்தி தான் தெரிஞ்சுக்கணும் என ரசிகர்கள் ஒத்த காலில் நிற்கிறார்கள்.