ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட கங்காரு முதியவர் ஒருவரைத் தாக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ரெட்மண்ட் என்ற நகரத்தில் முதியவர் வசித்தார். அவர் பலத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்த உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அங்கு கங்காரு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும்அந்த கங்காரு போலீசாரை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை. எனவே அந்த விலங்கை வேறு வழியில்லாமல் சுட்டுக் கொன்றனர். எனவே கங்காரு தாக்கிதான் அவர் இறந்தார் என போலீஸ் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 5 கோடி கங்காரு உள்ளன. அவை 90 கிலோ வரை எடையும் 2 மீட்டர் உயரமும் வளரும். இதே போல் 1936 ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஒரு பெரிய கங்காருவிடமிருந்து இரண்டு நாய்களை மீட்க முயன்ற வில்லியம் என்ற நபர் அந்த விலங்கால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு பின்னர் 86 ஆண்டுகள் கழித்து கங்காரு தாக்கி முதியவர் மரணமடைந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நகரமயமாகி வருவதால், வனப்பகுதியில் அழிக்கப்பட்டு, கங்காரு வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.