fbpx

வரதட்சணை கொடுமை.. பெண்ணை கொன்று நாடகமாடிய கணவன், மாமியார்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தேர்வை சேர்ந்த கோகுல கண்ணன் என்பவருக்கு லோக பிரியா என்ற பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் லோக பிரியா கடந்த 27ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற காவல்துறையினர், லோக பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அடுத்து பெண்ணின் பெற்றோர் லோக பிரியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வரதட்சணை காரணமாக கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி இருவரும் சேர்ந்து லோக பிரியாவை கழுத்தை நெறித்து கொலை செய்வது தெரிய வந்துள்ளது.

கொலை செய்துவிட்டு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல சடலத்தை தொங்க விட்டு தற்கொலை நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வரதட்சணையால் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Rupa

Next Post

சினிமாவில் ஓய்வெடுக்கப்போகும் சமந்தா.?! அவரே அறிவிப்பு.!

Fri Mar 31 , 2023
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவர், மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டு தற்போது தான் அந்த நோய்லிருந்து சரியாகி வந்துள்ளார். இத்தகைய நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை சமந்தா ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகின்றார். அதில், அவர், “கடுமையாக உழைக்கிறேன். உழைப்பினால் கிடைக்கும் வெற்றிதான் எனக்கு வேண்டும். சம்பள விஷயத்தில் நிர்பந்தம் செய்ய […]
ரொம்பவே கஷ்டம்..!! நடிப்பில் இருந்து ஓய்வு..? சமந்தாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like