கன்னியாகுமாரியில் வெள்ளாங்கோடு பகுதியில் ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளாங்கோடு கரிங்க வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52) . இவர் தனியார் வாகனம் ஓட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றார். இவரது மனைவி ரஜேஸ்வரி (46) , இவர்களின் மகள் நித்யா (22). இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நித்யாவுக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்குவந்து தாய் வீட்டிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் விவகரத்து கேட்டு கணவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் , கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் மன வேதனை அடைந்தார். அதே சமயம் ராஜேஸ்வரிக்கும் பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்துள்ளது. இதுவும் பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிருஷ்ணன் ’’ எனக்கு வாழவே பிடிக்கவில்லை’’ என மனைவியிடம் கூறியுள்ளார். 3 பேருமே பேசிவிட்டு தூங்கினர்.
இந்நிலையில் அவரது வீட்டுக்கு மேல் மாடியில் தங்கியுள்ள அவரது தாயார் வள்ளியம்மா கீழே இறங்கி வந்துள்ளார். வீட்டின் கதவு தாழிடாமல் இருந்துள்ளது. ’’ கிருஷ்ணா ’’ என கூப்பிட்டுக் கொண்டே வீட்டுக்குள் சென்றார். ஆனால் மூன்று பேரும் பேச்சு மூச்சின்றி சடலமாக கிடந்துள்ளனர். இதை பார்த்த வள்ளியம்மா அலறி கூச்சலிட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தில் இருந்து வந்தவர்கள் அருமனை போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து அவர்கள் சம்பவ இடத்தை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கடிதத்தை கணேசன் எடுத்தார். அதில் , ’’ கடன் தொல்லை மகளின் வாழ்க்கை , மனைவியின் மருத்துவ செலவு என கடுமையான உளைச்சலில் உள்ளோம். தொடர்ந்து கஷ்டம் மேல் கஷ்டம் வருகின்றது. சமாளிக்க முடியவில்லை. எனவே சாவது என முடிவு செய்தோம். எங்களின் உடல்களை குடும்பத்திற்கு சொந்தமான அரை சென்ட் இடத்திலேயே அடக்கம் செய்துவிடுங்கள். ’’ என்றிருந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கிது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்