கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.. இதனால் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக காந்தாரா மாறியது.. இந்த படத்தின் 2-வது பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதுகுறித்த அப்டேட் வெளியாகி உள்ளது..
தயாரிப்பாளரும் ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனருமான விஜய் கிரகந்தூர் காந்தாரா 2 உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் இப்போது கதையை எழுதி வருகிறார், மேலும் இரண்டு மாதங்களாக தனது உதவியாளர்களுடன் கடலோர கர்நாடகா காடுகளுக்குச் சென்று படத்திற்கான ஆராய்ச்சி நடத்தியுள்ளார்.
காந்தாரா 2, காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக இருக்காமல், அதன் முன்பகுதியாக உருவாக உள்ளது. அதாவது சீக்குவலாக (Sequel) இல்லாமல் ப்ரீக்குவலாக ( Prequel) உருவாக உள்ளது.. கிராம மக்கள், அரசன், பஞ்சுருளி தெய்வம் ஆகியோருக்கு இடையேயான உறவை ஆராயும் வகையில் இப்படம் உருவாக உள்ளது.. படத்தின் பட்ஜெட் மட்டுமே அதிகரித்துள்ளது.. கதை சொல்லும் முறை, ஒளிப்பதிவு ஆகியவை அதே தரத்தில் இருக்கும்..
மழைக்காலத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார், மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுவதே எங்கள் நோக்கம்.” என்று தெரிவித்தார்..