fbpx

பதற்றம்: பாஜக செயற்குழு உறுப்பினர் மீது கொலைவெறி தாக்குதல்.! தப்பியோடிய 4 பேருக்கு வலை வீச்சு.!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெட்டப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டாலிசன் (எ) கண்ணன்(46) பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறார். மண்டைக்காடு அருகே உள்ள புதூர் பகுதியில் அமைந்துள்ள சர்ச் திருவிழாவின்போது இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு மண்டைக்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த விவகாரத்தில் ஜஸ்ட் டாலிசன் மற்றும் பாஜக மீனவர் அணியை சேர்ந்த சகாயம் ஆகியோரிடையே முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சகாயம் என்ற ஐயப்பனின் ஆதரவாளர்கள் கருங்கல் அருகே உள்ள கடற்கரையில் வைத்து ஜஸ்டாலிசன் மீது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கருங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜஸ்டாலிசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சகாயம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தேவாலய திருவிழாவை தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதலால் அந்தப் பகுதிகளில் பதற்றம் நிலை வருகிறது.

Next Post

ராமர்கோயில் கும்பாபிஷேகம்..!! இன்று முதல் 11 நாட்களுக்கு விரதம்..!! பிரதமர் மோடி ஆடியோ வெளியீடு..!!

Fri Jan 12 , 2024
அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பிரதமர் மோடி சிறப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் ‘ராம், ராம்’ என துவக்கி தொடர்ந்து அவர் பேசுகையில், “வரும் 22ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதில் நான் பங்கேற்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்று முதல் 11 நாட்கள் விரதம் துவக்கி உள்ளேன். உணர்வுப்பூர்வமாக புதிய சக்தியை […]

You May Like