fbpx

கர்நாடக முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. டெல்லி பயணம் ரத்து..

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது..

ஜூன் மாதத்தில் பரவும் புதிய வகை கொரோனா? அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு பதில்..!

பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.. அந்த வகையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. லேசான அறிகுறிகள் இருப்பதால் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.. எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்படும் ஆபத்தான நோய்.. ஒருவர் உயிரிழப்பு... என்னென்ன அறிகுறிகள்..?

Sat Aug 6 , 2022
மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்பட்ட அரிய தொற்று நோயினால் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளையை உண்ணும் Naegleria Fowleri அமீபாவால் ஏற்படும் அபாயகரமான மூளைத் தொற்று ஆகும். இந்த வகை அமீபா தேங்கி நிற்கும் நீர் ஆதாரங்களில் காணப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் இந்த மூளைத்தொற்று காரணமாக 36 வயதான ஒருவர் உயிரிழந்தார்.. அந்த நபருக்கு அடிப்படை நோய் எதுவும் இல்லை, மேலும் அவருக்கு முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) இருப்பது […]

You May Like