fbpx

மென்பொருள் நிறுவனங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை…. மழையால் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டது குறித்து விரைவில் முடிவு -பசவராஜ்பொம்மை

பெங்களூருவில் பெய்த கனமழையால் ரூ.225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.டி.நிறுவனங்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பெங்களூருவில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. முக்கியமாக ஐ.டி.நிறுவனங்கள் உள்ள ஒயிட்பீல்டு , எலக்ட்ரானிக் சிட்டி , மடிவாலா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு அலுவலத்துக்குள் நுழைய முடியாமல் போனது. ஐ.டி.நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்கட்டமைப்பு வசதி மேற்கொள்ளாமல் போனதே இதற்கு காரணம் என்று ஐ.டி.நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதனால் ரூ.225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.டி.நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உள்கட்டமைப்பை சரி செய்வதோடு மட்டும் இன்றி இழப்பீடு தர வேண்டும் எனவும்  கோரியிருந்தனர். இல்லை என்றால் ஐ.டி.நிறுவனங்கள் வெளியேறும் எனவும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து தண்ணீர் சூழ்ந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் , ரூ.225 கோடி இழப்பீடு கேட்டிருந்தது பற்றியும்பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாககர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ’’ ஐடி கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் விரைவில் அழைப்பு தருவோம். அவர்கள் தங்கள் நிறுவனத்தை சுற்றி தண்ணீர் சூழ்வதாக தெரிவித்துள்ளனர். பாதிப்புகள் மற்றும் நிவாரணம் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவோம் ’’ என்றார்.

அவுட்டர் ரிங் சாலையில் பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உறுதியளித்தார்.

Next Post

’மரங்களை வேரோடு மாற்றுவதற்கு தொழில்நுட்பம் இருக்கு’..! 'அப்புறம் ஏன் இப்படி செய்றீங்க'..! ஐகோர்ட் கிளை

Mon Sep 5 , 2022
மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு தொழில்நுட்பம் இருக்கும்போது மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள்? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி, திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு […]
’மரங்களை வேரோடு மாற்றுவதற்கு தொழில்நுட்பம் இருக்கு’..! அப்புறம் ஏன் இப்படி செய்றீங்க..! ஐகோர்ட் கிளை

You May Like