fbpx

சொத்து குவிப்பு வழக்கு : துணை முதல்வர் டிகே சிவகுமார் மனு தள்ளுபடி..!! உச்சநீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கர்நாடகா அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக டிகே சிவகுமார் மீது வழக்கு தொடரப்பட்டது. தன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவகுமார் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது. ”உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இது குறித்து மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம், டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறையின் வழக்கை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Read more ; ’எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!

English Summary

Karnataka Deputy Chief Minister Sivakumar’s plea filed in the Supreme Court regarding the asset hoarding case was dismissed.

Next Post

'ப்யூர் வெஜ்' அசைவம் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரம்!! அதுவும் இந்தியாவில்.. பின்னணி என்ன?

Mon Jul 15 , 2024
For the first time in the history of the world non-vegetarian food has been banned in Bhavnagar district of Gujarat.

You May Like