fbpx

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு.. காணாமல் போன தமிழக மீனவர் உடல் சடலமாக மீட்பு..

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், காணாமல் போன மீனவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது..

தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பாலாறு வனப்பகுதியில், பாலாறும் – காவிரியும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள், பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள், பாலாற்றில் மீன் பிடித்துள்ளனர்.. அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் சிலர் தப்பி, கிராமங்களுக்கு சென்று விட்டனர்.. ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவிந்த பாடியை சேர்ந்த ராஜா ஒரு மீனவர் காணாமல் போயிருந்தார்.. எனவே அவர் கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகி இருக்கலாம் என்று கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர்..

இந்நிலையில் மேட்டூர் அருகே காணாமல் போன மீனவரின் உடல் மீட்கப்பட்டது.. தமிழக – கர்நாடக எல்லையை ஒட்டி அடிப்பலாறு பகுதியில் காணாமல் போன ராஜா என்ற மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராஜா உயிரிழந்தாரா என தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே, ராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும்..

Maha

Next Post

இந்தியா ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…! முதல் நாள் உணவு இடைவேளை ஆஸ்திரேலியா அணி 94-3…!

Fri Feb 17 , 2023
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4️ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய அணி முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது. அதோடு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த சூழ்நிலையில்தான் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள […]

You May Like