பொதுவாக பேருந்து, ரயில் உள்ளிட்ட பயணங்களின் போது பெண்களின் மீது பல ஆண்கள் சிலிமிஷத்தில் ஈடுபடுவார்கள் அப்படி ஆண்கள் செய்யும் சில்மிஷத்தை பெண்கள் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால் அதற்கு நேர் எதிராக கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஒரு பெண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பயணிகள் முன்னிலையில் அடித்து நொறுக்கி ஓட விட்டார். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கே ஆர் பேட்டை பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கே பேருந்தில் இருந்த பெண் ஒருவரை ஒரு இளைஞர் தகாத முறையில் தொட்டு இருக்கிறார்.
மேலும் அந்த பெண் பலமுறை எச்சரிக்கை செய்தும் அந்தப் பெண்ணை கிண்டல் செய்ததுடன் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது தொடர்ந்து தகாத முறையில் அந்த பெண்ணை சீண்டிக்கொண்டே வந்திருக்கிறார். அந்த இளைஞர் பலமுறை அந்தப் பெண் அந்த இளைஞரை எச்சரிக்கை செய்தும் அவருடைய சில்மிஷத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. பிறகு அவருடைய சீண்டிலையை தாங்க முடியாமல் கோபமடைந்த அந்த பின் அந்த நபரின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறை விட்டார்.
மேலும் அந்த இளைஞரின் கையை முறுக்கி பிடித்துக் கொண்டு கன்னத்தில் சரமாரியாக. தாக்கி இருக்கிறார் இதனை பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒருவர் கூட அந்த பெண்ணை தடுக்க முன்வரவில்லை காப்பாற்றவும் யாரும் தயாராக இல்லை. அதன் பிறகு அந்த இளைஞர் அடி தாங்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இறங்கி இறங்கி ஓடி விட்டார்.
இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒரு நபர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. அதில் அந்த பெண் வாலிபரை தாக்குவதையும் அதன் பிறகு வாலிபர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பிச் செல்வதையும் காணமுடிகிறது.
இந்த சம்பவம் குறித்து இதுவரையில் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. பட்டப்பகலில் பேருந்தில் வைத்து இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் வசமாக அடிப்பட்டு ஓடிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரத்தில் பரபரப்பை உண்டாக்கியது.