இன்று (டிசம்பர் 13) கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அலங்காரம் செய்து வழிபாட்டை மேற்கொள்வோம். கட்டாயம் இன்று அனைவரும் மண் அகல் விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி வைத்து தீப ஒளியில் அந்த அண்ணாமலையானை மனதில் நினைத்து, வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.
கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் விளக்கேற்றும் வழக்கத்தை காலம் காலமாக நாம் கடைபிடித்து வந்தாலும் ஒவ்வொரு முறையும் தீபம் ஏற்றுவது தொடர்பாக பலருக்கும் பலவிதமான கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் ஆகியன இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் மிக முக்கியமானதாக இருப்பது பழைய அகலில் தீபம் ஏற்றலாமா, கூடாதா? ஒவ்வொரு ஆண்டும் புதிய அகல் வாங்கித் தான் தீபம் ஏற்ற வேண்டுமா? என்பது தான். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
பழைய அகலில் தீபம் ஏற்றலாமா? கார்த்திகை தீபத்தன்று பழைய அகல் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நன்றாக சுத்தம் செய்து கழுவி விட்டு, காய வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அந்த விளக்கை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அகல் விளக்கு வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் பழைய அகல் மிகவும் கருப்பாகி, ஏதாவது ஒரு பாகம் சேதமடைந்து இருந்தால் அந்த அகலை பூஜை அறை குப்பைகளுடன் சேர்த்து விட்டு, புதிய அகல் வாங்கி பயன்படுத்தலாம். அப்படி இல்லாமல் புது அகல் வாங்கி விளக்கேற்ற வேண்டும் என நினைப்பவர்கள், வழக்கமாக ஏற்றும் பழைய விளக்குகளுடன் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது 2 புதிய அகல்களை வாங்கி வைத்து அவற்றையும் சேர்த்து ஏற்றலாம்.
Read more ; ரசிகை உயிரிழந்த விவகாரம்.. புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் கைது..!! பரபரப்பு