fbpx

ஒரே நாளில் 18,840 பேருக்கு புதிய கொரோனா வைரஸ்…! 43 பேர் பலி… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,840 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 43 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,104 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,04,394 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,29,53,980  பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,386 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,98,65,36,288 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,26,795 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

அமர்நாத் சோகம்.. மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்.. 16 பேர் பலி.. 40 பேர் மாயம்...

Sat Jul 9 , 2022
தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இதே போல் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. தொடர் மழையால் பல சாலைகள் மற்றும் பாலங்கள் நீரில் மூழ்கியதால், சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு, காஷ்மீரில் உள்ள அமர்நாத்தின் குகைக் கோயில் அருகே மேகவெடிப்பு காரணமாக பெய்த […]

You May Like