fbpx

ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் கரூர் டாக்டர்

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிரபல கரூர் மருத்துவர்.

கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்திவரும் பிரபல மருத்துவர் மோகன் என்பவர், தனது மருத்துவமனையுடன் அமைந்துள்ள வீட்டு கேட்டில் ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை தொங்கவிட்டுள்ளார்.

அந்தப் பலகையில் மாண்புமிகு வேட்பாளர்கள் அவர்களே *நீங்கள் நேர்மையானவரா? *நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை தருவீர்களா? அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவரா? *வாக்குகளை விலை பேசாதவரா? *மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் செயல்திட்டங்கள் உள்ளவரா? *மக்கள் எளிதாக அணுகக்கூடியவரா? *ஆம் என்றால் வாக்கு கேட்க வருக„ Dr.K.மோகன் என அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் மோகன் தெரிவித்ததாவது.

வாக்களிக்கும் பொதுமக்கள் மனச்சாட்சியுடன் நடந்து கொண்டு இலவசங்களுக்கும் 500, 1000-க்கும் விலை போகாமல் நியாயமாக வாக்களித்தால், கட்டாயம் அரசியல்வாதிகளும் நியாயமான மனிதர்களாக மாறிவிடுவார்கள். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் நமது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை புரிந்து கொண்டு நாம் வாக்களிக்க வேண்டும். இலவசங்களுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு வாக்களித்தால் வருங்கால சந்ததியினர் குடிகாரர்களாகவும், கடன்காரனாகவும் மாறிவிடுவர். முதலில் வாக்களிக்கும் நாம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். நேர்மையாக வாக்களிக்க வேண்டும். நேர்மையான மனிதரை தேர்வு செய்தால் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி நடைபெறும் என தெரிவித்தார்.

Rupa

Next Post

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு: சந்தேக நபர் சென்னையில் தங்கியிருந்தது விசாரணையில் அம்பலம்

Sat Mar 23 , 2024
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் மார்ச் 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர், சம்பவத்திற்கு முன்னதாக, போலி ஆதார் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரு கூட்டாளியுடன் தங்கியது எம்ஐஏ விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் உள்ள CCTV காட்சிகளில் சந்தேக நபர் அணிந்திருந்த பேஸ்பால் தொப்பி சென்னையில் கடந்த ஜனவரி மாதம் […]

You May Like