fbpx

காசி தமிழ் சங்கமம் 2.0 டிசம்பர் 17 முதல் 30 வரை வாராணாசியில் நடைபெறுகிறது…!

காசி தமிழ் சங்கமம் 2.0 டிசம்பர் 17 முதல் 30 வரை வாராணாசியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே தொன்று தொட்டு வரும் ஒரு பந்தமாகும். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், காசி தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும்.

தற்போது வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கல்வி அமைச்சகத்தால் 17 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது கட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் கட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்ச்சிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள், வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றனர்.

Vignesh

Next Post

காப்பீடு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Fri Dec 15 , 2023
இந்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனமான யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (United India Insurance) பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 300 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலியிட விவரங்கள் : 300 உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை தற்காலிகமானது தான் என்றும், நிர்வாக காரணங்களினால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும். கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு […]

You May Like