அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 6-ம் தேதி விடுமுறையாகும்.. மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோயில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

.

Maha

Next Post

மக்களே அலர்ட்... தமிழகத்தில் மட்டும் புதிதாக 2,662 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...! உயிரிழப்பு எண்ணிக்கை....?

Wed Jul 6 , 2022
தமிழகத்தில் மேலும் புதிதாக 2,662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,188 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழகத்தில் இருந்த 2,658 நபர்களுக்கும் என மொத்தம் […]
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா..!! இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா..? உடனே இதை பண்ணுங்க..!!

You May Like