fbpx

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்..

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லக்ஷ்மணன் வீர மரணம் அடைந்தார்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றனர்.. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் பதிலடி கொடுத்தனர்.. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.. இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.. 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.. இதில் காயமடைந்த ராணுவ அதிகாரி மற்றும் ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.. அவர் மதுரை புதுப்பட்டியை சேர்ந்த லக்ஷ்மணன் என்ற தகவலை ராணுவம் வெளியிட்டுள்ளது.. அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா..? - சீமான்

Thu Aug 11 , 2022
ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ”அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்களோ, அப்பொழுது தான் நாடு உருப்படும். ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே? அப்பொழுது அது சார்ந்து […]

You May Like