ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொன்றனர்..
காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது… அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொன்றனர்.. தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அச்சான் பகுதியில் உள்ள தனது கிராமத்தில் ஆயுதமேந்திய காவலராக பணிபுரியும் சஞ்சய் சர்மா என்ற நபர் மீது பயங்கரவாதிகள் அதிகாலையில் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்றும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதிவிட்டுள்ளது.. அந்த பதிவில் “உள்ளூர் சந்தைக்குச் செல்லும் வழியில் சஞ்சய் சர்மா என்ற சிறுபான்மையினரைச் சேர்ந்த ஒரு குடிமகன் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. இருப்பினும் அவர் காயமடைந்தார், அவர் உயிரிழந்தார். அவரது கிராமத்தில் ஆயுதமேந்திய காவலர் இருந்தார். அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. ” என்று தெரிவித்துள்ளது.