fbpx

“இந்தி திணிப்பு.. மூலம் ஆங்கிலம் அகற்றம்” கவிஞர் வைரமுத்து ஆர்ப்பாட்டம்.!

கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உரையாடிய கவிஞர் வைரமுத்து, “2022-ல் இந்தி எதிர்ப்பு பற்றி தமிழர்களிடம் கூடுதல் எழுச்சி ஏற்பட வேண்டும். இது கடந்த 1965 விட வலுவானதாக இருக்க வேண்டும். சமீப காலமாக பல இடங்களில் இந்தி மொழி திணிப்பு நடைபெற்று வருகிறது.

அத்துடன் இந்தி மொழி தெரியாதவர்கள் மத்திய அரசுடைய பணிகளில் சேரவே முடியாது எனும் நிலையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். பயிற்சி மொழியாக இந்தியை கொண்டு வந்து நம்மிடமிருந்து ஆங்கிலத்தை அகற்ற முயற்சிக்கின்றனர்.

நாம் வசதியுடனும், குறைவில்லா வாழ்க்கையுடனும் இருக்க தமிழும் ஆங்கிலமும் தெரிந்தால் மட்டும் போதும். இந்தி அவசியம் இல்லை.” என்று பேசியுள்ளார்.

Rupa

Next Post

விருத்தாச்சலம் ; மதுபோதையில் இளைஞர்கள் அராஜகம்.. எங்கே போகிறது தமிழகம்?

Wed Oct 26 , 2022
சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் விருத்தாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி சாலையில் இருக்கும் மது அருந்திய படி சில இளைஞர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்கே கூச்சலிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இளைஞர்களின் இந்த மோசமான நடவடிக்கையை அப்பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவருடன் தகராறு செய்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் மெயின் கேட்டை […]

You May Like