fbpx

டெல்லியின் அடுத்த முதல்வராகும் அதிஷி மார்லெனா..!! அவரின் பின்னணி என்ன?

டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு இருந்தார். மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் கைது செய்தனா். இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று (செப்.,15) கட்சி தொண்டர்கள் மத்தியில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், நீதிமன்றத்தால் தற்போது ஜாமீன் பெற்றிருக்கும் நான் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்றும் நான் குற்றமற்றவன் என்பதை மக்கள் நம்பி எனக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவியில் அமருவேன் என்று சூளுரைத்தார். அதோடு, 2 நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்தார். இதனால், முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் இன்று  ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் எம்எல்ஏகளுடன் நடந்து வரும் கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றத் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய பொறுப்புகளில் அதிஷி: அரவிந்த் கேஜ்ரிவாலால் அடுத்த முதல்வராக முன்மொழியப்பட்டுள்ள அமைச்சர் அதிஷி, டெல்லி அரசின் கேபினட் அமைச்சராக உள்ளார். அவர் தன்னிடம் கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளைத் தன்னிடம் வைத்துள்ளார். டெல்லியின் கல்காஜி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிஷி கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வருகிறார்.

Read more ; 2024இல் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..!! வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை..!!

English Summary

Kejriwal resigns.. Adishi will be the next Chief Minister of Delhi..!! Who is this Adishi Marlena?

Next Post

பைக் மீது டேங்கர் லாரி மோதி ஒரே வாகனத்தில் சென்ற 4 பேர் பலி..!! நெல்லையில் சோகம்..!!

Tue Sep 17 , 2024
While trying to cross the tanker truck, 4 people died on the spot when they got stuck in the wheel of the truck.

You May Like