fbpx

கேரளா குண்டுவெடிப்பு: ஒரு மதத்தினரை குறிவைக்கப்பட்டு இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதா..? முதல்வருடன் C பேச்சு..

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. களமச்சேரி பகுதியில் 1000 பேர் கலந்துகொண்ட ஜெப கூட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது சுமார் 9.45 மணிக்கு இரண்டு முறை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குண்டு வெடிப்பை அடுத்து, இடம் முழுவதும் தீ பற்றி எறிந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பை அடுத்து அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் வெடித்த பொருள் என்ன என்று தீவிர சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் குண்டுவெடிப்பின் போது சம்பவ இடத்தல் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் தொலைபேசியில் உரையாடல் நடத்தி இருக்கிறார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு மதத்தினரை குறிவைத்து நடைபெற்றதா என்ற சந்தேகம் காரணாமாக இந்த உரையாடல் நடந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்.எஸ்.ஜி கமாண்டோ குழுக்களும் சோதனையில் ஈடுபட உள்ளனர். என்.எஸ்.ஜி கமாண்டோக்களிடம் வெடிமருந்து தொடர்பாக பல நிபுணர்கள் உள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து வந்திருக்கும் ஆரம்பகட்ட தகவலின் படி improvised explosive device (IED ) என சொல்லப்படும் குண்டு வெடித்திருக்கலாம் என்று, இது டைமர் மூலமாக இயக்கப்பட்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாக என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் அங்கு சென்று அதை கண்டறியவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Kathir

Next Post

உலகிலேயே சிவனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் எது தெரியுமா?… அதுவும் தமிழ்நாட்டில் தான் இருக்கு!

Sun Oct 29 , 2023
தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் முதல் சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் ஊர் என்றும் போற்றப்படுகிறது. இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குவதாகவும் கூறுகிறார்கள். இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரங்கள் […]

You May Like