fbpx

சிறுவனை துரத்தி துரத்தி கடித்த நாய் …கேரள மாநிலம் கோழிக்கோடில் பரபரப்பு …

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் வழக்கம் போல சைக்கிளில் விளைாயடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் திடீரென சிறுவவனின் சைக்கிளின் குறுக்கே வந்து நின்றது.  இதனால் அந்த சிறுவனம் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து அலறினான். அப்போது விடாமல் சிறுவனை துரத்திய நாய் அவனை கடித்தது.

பயத்தில் சிறுவன் சைக்கிள் அருகே ஓடி வந்தான். பின்னாடியே வெறித்தனமாக பாய்ந்த நாய் மாறி மாறில கடிக்கத்தொடங்கியது. இந்த காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகி தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றது. தெரு நாய் அப்பகுதியை் சேர்ந்த நளினி என்பவர் உள்பட 4 பேரை இதுவலை கடித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் நாயைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் . நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தெருநாய்கள் ஆங்காங்கே தொல்லை கொடுப்பதாக கூறியுள்ள பொதுமக்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். இது தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு செய்துவ விசாரணை செய்து வருகின்றது.

Next Post

ஞானவாபி மசூதி வழக்கு.. வாரணாசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

Mon Sep 12 , 2022
ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்தக் கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி, தற்போது சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது.. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த 5 […]

You May Like