fbpx

ஸ்வப்னா சுரேஷின் அடுத்த அதிரடி.. முன்னாள் சபாநாயகரின் கருத்துக்கு பதிலடி.!

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சமீபத்தில் தனது வாழ்க்கை குறித்து ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.

அப்புத்தகத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன், பினராயி குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மற்றும் பினராய் விஜயனின் அலுவலகத்தை சேர்ந்த சில முக்கிய நபர்கள் மீது பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோர் தம்மை பலமுறை படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்வப்னாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து, முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். ஸ்வப்னா சுரேஷ் அவருக்கு பதிலிளிக்கும் விதமாக அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுவே எளிமையான மற்றும் அடக்கமான பதில். தம் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும், மீதமுள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் விரைவில், தான் தாக்கல் செய்ய போவதாக கூறி ஸ்வப்னா சுரேஷ் முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Rupa

Next Post

சற்று முன்... நாளை குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறும்...! ஆட்சியர் அறிவிப்பு...!

Wed Oct 26 , 2022
தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நாளை காலை 11.30 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும்‌, கருத்துகளையும்‌ தெரிவித்து பயன்பெறலாம்‌. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌வருகின்ற 27.10.2022 […]

You May Like