கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா இலத்தூர் பகுதியில் சமீபத்தில் நரபலி நடந்த விஷயம் வெளியில் வந்தது. இந்த வீடு இலத்தூர் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இப்பகுதியில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நரபலி நடந்த இந்த வீட்டை பார்க்க அன்றாடம் பத்தனம்திட்டா பகுதியில் இருந்து நிறைய மக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.
இலத்தூர் பகுதியில் பேருந்தில் வந்து இறங்கும் அவர்கள் நரபலி கொடுக்கப்பட்ட வீட்டை பார்க்க ஆட்டோவில் வந்து செல்கின்றனர். அந்த வீட்டிற்கு செல்ல ஒரு ஆட்டோ டிரைவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.
பிரத்தியேகமாக அந்த ஆட்டோவை அந்த பகுதிக்கு என்று அவர் ஒதுக்கி, அதில் நரபலி கொடுக்கும் இடத்திற்கு செல்லும் ஆட்டோ என்று சீட்டு எழுதி ஒட்டி உள்ளார். இதன் மூலம் அவர் தினமும் 1200 வரை பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.