fbpx

கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் தற்கொலை..!! நடந்தது என்ன..? விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

கேரள மாநிலம் பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்த பிரவின்நாத் பாடிபில்டர், கேரளாவின் கோட்டக்கல்லைச் சேர்ந்த ரிஷானா ஐஷு மிஸ் மலபார் பட்டத்தை வென்றவர். 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தவர்கள் காதலர் தினத்தில் கரம் கோர்த்தனர். திருநங்கைகளான பிரவீனும், ரிஷானாவும் திருமணத்தின் மூலம் இணைந்தனர். இந்நிலையில், இவர்கள் பிரிந்து செல்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் சில சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரவீன். பிரவீன் சமூக வலைதளங்களில் தங்களுக்கு எதிரான தவறான பிரச்சாரங்களை மறுத்து பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், மனம் உடைந்து காணப்பட்ட பிரவீன்நாத், திடீரென நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். பூச்சி மருந்தை உட்கொண்ட ரிஷானா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

சிபிஎஸ்சி மாணவர்களே ரெடியா இருங்க…..! விரைவில் வெளியாகிறது தேர்வு முடிவுகள்….!

Fri May 5 , 2023
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்சி 2023 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த வாரம் அல்லது எதிர் வரும் மாதத்தில் வெளியிடலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகிறது. ஆனாலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை. […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like