கேரள மாநிலம் மூணாறு அருகே பேருந்து டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூணாறில் இருந்த எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாக்கோச்சி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக அப்போது டயர் வெடித்துள்ளது. நிலை தடுமாறிய பேருந்து பமரத்தில் மோதி சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இருந்துள்ளனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் இருந்த பயணிகளை மீட்டனர்.

அடிமாலி என்ற பகுதியில் இருந்து சஞ்சீவ் என்ற பயணி ஒருவர் அந்த பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணம் செய்த ஓட்டுனர் , நடத்துனர் மற்றும் 20 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.