Khalistan terrorist: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியர்கள் அதிகம் இருக்கும் வெளிநாடுகளில் ஒன்று கனடா.. அதேநேரம் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தையும் ஆதரிக்கும் பலரும் கூட அங்கு உள்ளனர். நமது இந்தியாவைப் போல காலிஸ்தான் இயக்கங்களுக்கு அங்குத் தடை இல்லை. அதன்படி, கனடாவில் இயங்கி வந்த காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவரை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது இல்லத்தில் வைத்து மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த படுகொலை சம்பவத்திற்கு இந்தியா காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது சர்வதேச அளவில் பரபரப்பானது. மேலும், இந்தியா கனடா இடையேயான உறவும் மிகக் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்தியா ஆதாரம் கேட்டது. இருப்பினும், ஆதாரம் வழங்க மறுத்த கனடா, தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டுமே சொல்லி வந்தது.
இதையடுத்து, இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு தங்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கனடா கூறியது. கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தனது அரசு வெறும் தகவலை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகவும் ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புக்கொண்டார். இந்தநிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ‘ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து, போலியான தகவல்கள் பரப்பப்பட்டு விட்டன. நிஜ்ஜார் கொலை வழக்கில் எந்த வெளிநாடுகளுக்கும் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.