fbpx

இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான கியா கேரன்ஸ் எக்ஸ் லைன்…! முழு விவரம் உள்ளே….!

கியா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக கியா கேரன்ஸ்  எக்ஸ் லைன் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் 18.95லட்சம் முதல் 19.44 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் இரண்டு பிரிவுகளில் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கார் எம்.பி.வி மாடல்களில் தனித்துவமாக திகழ்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை பார்த்த உடனே பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே பிரிவை சார்ந்த மற்ற சொகுசு கார்களை விட இந்த கார் 54,000 அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் பல்வேறு அதிநவீனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரின் பின்பக்க இருக்கையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதேபோல பாட்காஸ்ட் கேட்பது முதல் திரையில் படங்கள் பார்ப்பது வரையில் பல்வேறு செயலிகள் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் ஸ்மார்ட் போன் செய்து என் மூலமாக பின்பக்க இருக்கையில் உள்ள திரையை  நீங்கள் பார்க்க முடியும்.

அதேபோல இந்த காரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக, பல வசதிகள் மற்றும் ஆடம்பரங்களை பயன்படுத்தி எம்.பி.வி மாடல் கார்களை மறுவரையறை செய்திருக்கிறது அந்த நிறுவனம்.

Next Post

காசா பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகளை, வேட்டையாடிய இஸ்ரேல் காவல்துறையினர்....!

Wed Oct 11 , 2023
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பாலஸ்தீன புரட்சி அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் ஹமாஸ் அமைப்பினர், திடீரென்று வான்வழி தாக்குதல் நடத்தினர் வான்வழி தாக்குதல் மட்டுமல்லாமல், பல அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஒருபுறம் கடுமையான போர் நடந்து […]

You May Like