fbpx

14 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்….! கதறும் பள்ளி மாணவியின் பரிதாபம்……!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் தான் அந்த மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார். பின்னர் அந்த மனைவியிடம் பெற்றோர் விசாரித்த போது தான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்ற இளைஞர் தன்னை கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். அவர் வெளியில் சென்ற நேரத்தில் தப்பித்து வந்ததாக அந்த சிறுமி கூறி இருக்கிறார், இதை கேட்டு அவருடைய பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

Next Post

#Breaking: பொறியியல் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு...!

Thu Jun 22 , 2023
பொறியியல் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You May Like