fbpx

Nigeria: 300 பள்ளி மாணவர்கள் கடத்தல்!… காப்பாற்ற முயன்ற ஒருவர் சுட்டுக்கொலை!… தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவம்!… அச்சத்தில் பெற்றோர்கள்!

Nigeria: நைஜீரியாவில், சுமார் 300 பள்ளி மாணவா்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. இந்த நாட்டின் வடமேற்கு நகரமான கடுனா மாகாணத்தின் குரிகாவில் கடந்த 9ம் தேதி 280க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குரிகாவை உள்ளடக்கிய கடுனா மாகாணத்தின் ஆளுநரான உபா சானியும் இத்தகவலை உறுதிப்படுத்தியிருந்தார்.

துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர், அப்பள்ளிக்குள் சென்று மாணவர்களைக் கடத்திச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. கடத்திச் சென்ற குழந்தைகளை உள்ளூர் மக்கள் மீட்கப் போராடியுள்ளனர். ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டியுள்ளனர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். விறகு சேகரிக்க சென்ற பெண்கள் 12 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்களை கடத்தியது எந்தக் குழு என யாரும் இதுவரை அறிவிக்கவில்லை.

இதுகுறித்து அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு, “கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சனிக்கிழமை மீண்டும் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் இருசக்கர வாகனங்களில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. மாணவர்களை காப்பாற்ற உதவிய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு குழந்தை வீதம் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 28 பேர் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக நைஜீரியாவின் மற்றொரு வடக்கு மகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடந்த 2014-ல் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

Readmore: இன்றுமுதல் ரமலான் நோன்பு தொடக்கம்!… இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக எப்படி மாறியது?

Kokila

Next Post

DMK: ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்தி பேசினால் கிரிமினல் வழக்கு...! எம்.பி அதிரடி

Mon Mar 11 , 2024
ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம் என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் […]

You May Like