fbpx

இரண்டாவது மனைவியை 18 துண்டுகளாக வெட்டிய கணவர்..!

ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் பழமையான பழங்குடியினத்தில் தில்தார் அன்சாரி எனபவர் தனது இரண்டாவது மனைவி ரூபிகா பஹாதி(22) என்பவருடன் வசித்து வந்துள்ளார் . இந்த நிலையில் தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் கணவர் ரூபிகாவை கொலை செய்து உடலை 18 துண்டுகளாக வெட்டியுள்ளார். 

இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் , விசாரணை செய்ததில் ரூபிகாவின் மரணத்தில் கணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவ‌ல்துறை‌யின‌ர் கைதுசெய்தனர். இதனிடையே வெட்டப்பட்ட உடற்பாகங்களில் சுமார் 12 பாகங்கள் கிடைத்துள்ளன. மேலும் காணாமல்போன 6 பாகங்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Rupa

Next Post

காலையில் எழுந்தவுடன் பெட் காபி குடிப்பது நல்லதா?

Mon Dec 19 , 2022
காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு டம்ளர் காபி அருந்தியபடி, பேப்பர் படிப்பதும், பெட்காபி குடிப்பதும் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆரோக்கியமானதுதானா? என்றால் நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் வெறும் வயிற்றுக்குள் போகும் காபி என்னென்ன […]

You May Like